தேசிய சேவை திட்டம்
ஆளுமை வளர்ச்சியை சமூக சேவை வழியாக அடைவதே தேசிய சேவை திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்த திட்டம் சமூக நல எண்ணங்களை மாணவர்களுக்கு கற்பிக்கவும் ,தீய எண்ணம் இல்லாமல் சமூக சேவை புரியவும் உதவுகிறது.
தேசிய சேவை தொண்டர்கள் இரவு பகல் பாராமல் மக்களுக்கு தம்மால் முடிந்த் உதவிகளை செய்கிறார்கள். அதன் மூலமாக மக்கள் தங்களின் தரம் மற்றும் கௌரவத்தை நிலைநாட்ட துணை புரிகிறது.
இந்த பணிகளின் மூலமாக தொண்டர்கள் கிராம புற மக்களின் போராட்டங்களையும் மற்றும் பற்றாக்குறையான வளங்களுடன் எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பதையும் கற்று கொள்கிறார்கள்.
வளாகம்:
முகாம்கள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்திய அரசின் நிதி உதவி மூலமாக இந்த செயல்பாடுகள் நடத்தப்படுகிறது. புறநகர்கள் மற்றும் கிராமப்புரங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தொண்டர்களின் செயல்பாடுகள்:
1. தூய்மைப்படுத்துதல்
2. மரம் நடுதல்(காடு வளர்ப்பு)
3. மேடை நிகழ்ச்சிகள் அல்லது சமூக அவலங்களை கல்வி ,சுத்தம் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலங்களை நடத்துகின்றனர்.
4. சுகாதார முகாம்களுக்கு மருத்துவர்களை அழைக்கிறார்கள்.
தொண்டர்களுக்கு வரையறுக்கப்பட்ட பணிகள் கிடையாது,அவர்களின் விருப்பப்படி தங்களால் இயன்ற உதவிகளை சமூகத்திற்கு செய்கிறார்கள்.
ஒரு வாரத்திலிருந்து பத்து நாட்கள் வரை முகாம்கள் நடத்தப்படுகிறது.
மேற்கொள்ளப்பட்ட பெரிய திட்டங்கள்
1.கிராம தத்தெடுப்பு
2.சாலை உருவாக்குதல் மற்றும் செப்பணிடுதல்
3.காடு வளர்ப்பு
4.எழுத்தறிவு வகுப்புகள் நடத்துதல்
5.நீர் சேகரிப்பு திட்டம்
6.பிளாஸ்டிக் ஒழிப்பு
திரு.வெற்றி வேந்தன்,தேசிய சமூக சேவை திட்ட அதிகாரி.
திரு.ரமேஷ் பாபு ,தேசிய சமூக சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர்
SKR பொறியியல் கல்லூரியின் தேசிய சேவை அமைப்பு தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து "மரக்கன்றுகள்" நடுதல் நிகழ்ச்சியின் மூலமாக நூற்றுக்கும் மேலாண மரக்கன்றுகள் நடப்பட்டன.
திருமதி சுகந்தி இயக்குநர் முதல் இளஞ்செடி நடுதல் திட்டத்தை தொடங்கி வைத்தார்.அவர் மனித வாழ்க்கையில் மரம் நடுதலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
உலக வெப்பமயமாதல்,காடு அழித்தல்,சுற்றுப்புற சீர்கேடு தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளை மேற்கோள்காட்டினார்.
பூமியை உலக வெப்பமயமாதல் மற்றும் சுற்றுப்புற சீர்கேட்டிலிருந்து பாதுகாக்க நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வழியுறுத்தினார்.
Rtn கிருஷ்ணன் ரோது, காரியதரிசி, ரோட்டரி சங்கம் நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக இருந்து சிறப்பித்தார்.
அந்த தருணத்தில் SKR தேசிய சேவை திட்ட தொண்டர்களின் முயற்ச்சிகளை அவர் பாராட்டினார்.
வனத்துறை அதிகாரிகள், SKR கல்லூரியின் துணை முதல்வர், டீன், துறை தலைவர்கள், தேசிய சேவை அதிகாரிகள், பேராசிரியர்கள், உதவிபேராசிரியர்கள், மாணவர் மற்றும் தேசிய சேவை தொண்டர்கள் அனைவரும் இளஞ்செடிகளை நட்டு வைத்தனர்.