பொது நூலகம்

 

பொது நூலகம் கல்லூரியின் அனைத்து பிரிவினரும் குறிப்பாக பேராசிரியர்கள் இளநிலை முதுகலை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அரிய நூல்களையும் ஆராய்ச்சி இதழ்களையும் உள்ளடக்கி உள்ளது. கல்லூரியின் அனைத்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பயனுறும் வகையில் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியின் பொது நூலகத்தில் பொறியியல் அறிவியல் மற்றும் மேலாண்மை துறையில் சிறந்த அனைத்து புத்தகங்களும் உள்ளது.

 

சிறந்த மாணவர்களுக்கான சலுகை:

 

ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு தங்கள் திறமையை வளர்க்கும் பொருட்டு 6 துறை சார்ந்த அல்லது துறை சாராத புத்தகங்களை வழங்கி அந்த பருவ காலம் முழுவதும் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.


 

கணினி பயன்பாட்டு நூலகம்:

 

இந்த நூலகத்தில் Autolib Software package என்ற மென்பொருளை பயன்படுத்தப்படுகிறது. நூலகத்தின் தினசரி வேலைகள் அனைத்தும் இம்மென்பொருளை சார்ந்தே அமைந்துள்ளது. கல்லூரியின் இப்பொது நூலகம் வாயிலாக இளம்பொறியியல் மற்றும் முது பொறியியல் துறை மாணவர்கள் பயன்பெறுவதால் நூலகத்தில் உள்ள புத்தகங்களின் நிலைப்பாடு அதாவது நூலகத்தில் உள்ளதா? இல்லையா? என்ற தினசரி நிலைப்பாடு கணினி மூலம் அறியப்படுகிறது. மாணவர்கள் தங்களின் தேவைக்கேற்ப புத்தகங்களை முன்கூட்டியே பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். பொது நூலகத்தில் இ-நூலகம் (e-library) மூலம் அனைத்து துறை சார்ந்த மற்றும் துறைசாரா அறிவுகளை தனிப்பட்ட 12 கணினி மூலம் பெற ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த இ-நூலகத்தில் உள்ள அனைத்து கணினிகளும் இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

நூலகத்தின் தனிச்சிறப்புகள்:

 

  • ஆலோசனை நூல்கள் பிரிவு:
  • இ-புத்தக வசதி
  • மின்னஞ்சல் வசதி
  • இணையதள வசதி
  • நகலக வசதி (Xerox)

 

நூலக இணைப்பு மையங்கள்:

 

  • இந்திய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (IIT), சென்னை
  • அண்ணா பல்கலைக்கழகம்
  • பிரிட்டிஸ் கவுன்சில் நூலகம்
  • AICTE – INDEST (IEEE)
  • Computer Society of India
  • Indian Society for Technical Education
  • DELNET
 

நூலக வேலை நேரம்:

காலை 8.00 a.m. முதல் மாலை 5.00 p.m.