கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை 2001 -2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. AICTE மூலம் அங்கிகரிக்கப்பட்ட இத்துறை 60 மாணவர்களை உட்கொண்டதாக அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படடுள்ளது. இத்துறை நான்கு ஆண்டு பட்டப்படிப்பை வழங்குகிறது. 2006 -07 ஆம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையானது 120 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு ஆண்டு கணினி அறிவியியல் மற்றும் பொறியியல முதுகலை பட்டப்படிப்பு; ஆண்டிற்கு 18 மாணவர்களை உள்ளடக்கி 2010-2011 ஆம் ஆண்டு முதல் செயல்ப்பட்டு வருகிறது.
கணினி ஒவ்வொரு வகையான உயர்தர அமைப்புகள் வடிவமைத்து பராமரிக்க தொழில் முறை பணியாளர்கள் தேவை. இந்த பாடப் பிரிவு ஒரு முழுமையான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி கட்டமைப்புகள், பொறியியல் அமைப்பு, கணினி பயன்பாடு மற்றும் மென் பொருள் ஆகியவற்றை வழங்குகிறது. அதன் உருவாக்கத்திற்கு பின்னர் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை எப்போதும் ஒரு உயர்வளர்ச்சி பாதையில் செல்கிறது. சமீபத்திய இந்தத் தொழில் நுட்பங்களுடன் சேர்ந்து செல்ல துறையின் ஆராய்ச்சியில் மிகுந்த ஈடுபாடுள்ள வலுவான அர்பணிப்பு மற்றும் அனுபவமிக்க பேராசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மாணவர்கள், ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் இந்த வசதியினை பயன்படுத்தி வருகின்றனர். ஓவ்வொரு கணினியும் ஆய்வக வலையமைப்பில் உள்ள கணினிகளோடு இணைக்கபட்டுள்ளது.
இத்துறையில் உள்ள ஆய்வகம் 185 கணினிகளுக்கு மேலாகவும், சமீபத்திய வன்பொருள் மென்பொருள் மற்றும் இணையதள வசதிகளை கொண்ட குளிர்சாதன அறையில் உள்ளது. ஆய்வகத்தில் விண்டோஸ் சர்வர் 2003 – 2008 லினக்ஸ் மற்றும் ரெட்காட் சர்வர்களும், விண்டோஸ் எக்ஸ்பி இயக்க அமைப்புகள் சமீபத்திய டுயல்கோர், கோர் 2 டியோ, கோர் i3 பிராசர்கள் உதவியோடு இயங்குகிறது.
அனைத்து ஆய்வகங்களும் வலையமைப்பில் பட்டு உரிமம் அளிக்கப்பட்ட மென்பொருள் உதவியோடு உலகளாவிய நுட்பத்துடன் செயல்படுகிறது. மாணவர்கள் தங்கள் அறிவு நுட்பங்களை கூர்மையாக்கி மேம்படுத்தி கொள்ள 20 Mbps பிஎஸ்என்எல் இணையதளம் மற்றும் வைபைவ் வசதிகளை வழங்கியுள்ளது. மாணவர்களுக்கு புகழ் பெற்ற தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களில் இருந்து பெறப்படும் நேரடி திட்டங்களில் பணிபுரிய வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இத்துறையில் கீழ்வரும் ஆய்வகங்கள் சமீபத்திய மென்பொருள்கள் மற்றும் உள்ளமைப்புகளை கொண்டது.
கம்ப்யூட்டர் ஆய்வகங்கள்
- Data Structures/OOPS laboratory
- DBMS / Internet Programming laboratory
- System Software / CASE Tools Lab
- Network /Operating System Lab
மாணவர்களில் பலர் துறையில் நடைபெற்ற பணியகம், கருத்தரங்கு, வல்லுநர்களின் சொற்பொழிவு ஆகியவற்றில் பங்கேற்று தங்கள் அறிவுத் திறனை மேம்படுத்தி கொள்ள மாணவர்கள் பலர் ஆசிரியர்களின் உன்னிப்பான கவனித்தின் கீழ்; உள்ளனர். மாணவர்களின் குழுக்களை வழி நடத்தவும் கண்காணிக்கவும் ஆலோசகர்கள் தனியே அமர்த்தப்பட்டுள்ளனர். தொழிற்சாலைகளின் சூழ்நிலைகளை பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள பல்வேறு விதமான தொழிற்சாலைகளை பார்வையிடும் வாய்ப்பினை துறை ஏற்படுத்துகிறது.
இத்துறை கல்வி,ஆராய்ச்சி மற்றும் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டுள்ளது. மாணவர்கள் பிரபலமான தொழிற்சாலைகளில் பணியமர்தபட்டு உள்ளனர். மேலும் பிரதான நிலையங்களில் மேற்ப்படிப்பை தொடர்கின்றனர். துறை தொழிற் அமைப்புகளுடன் சேர்ந்து துணை பாடநெறி மற்றும் பாடத்திட்டம் சார செயல்கள் மேற்க்கொள்கின்றனர். துறை வழக்கமாக மேம்ப்பட்ட தலைப்புகளிள் பாடக்கோப்பு நடத்துகின்றது.
துறை மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அளிக்க முன்னணி நிறுவனங்களான IBM,Redhat,Microsoft,Cisco உடன் MOU ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. துறையில் வளர்ந்து வரும் தொழில் நுட்ப பகுதிகளில் வல்லுநர்களின் உரை,கருத்தரங்குகள்,பயிற்சி பட்டறைகள் மற்றும் மாநாடுகள் வழங்குவதில் நல்ல பதிவு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் தொலைதூர கல்வி திட்டங்கள் பற்றி அறிய உதவும் EDUSAT வசதியை இத்துறை வழங்குகிறது. முன்னாள் மாணவர்கள் பலர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகிக்கிறார்கள்.
| நிறுவிய ஆண்டு: | 2001 |
| துறை கல்வி தலைவர்: | முனைவர் ஆர் சுகுணா |
| துறை நோக்கம்: | கணினி அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சியில் சிறப்பான நிலை பெற்று மனித மதிப்புகளுடன் தொழில் நுட்ப அரங்கில் விரைவான முன்னேற்றனங்களுக்கு ஏர்ப தன்னை மாற்றிக்கொலள்ள வேண்டும். |
| துறை குறிக்கோள்: | கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் சவாலான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறன் வாய்ந்த கணினி வல்லுநர்களை உருவாக்க வேண்டும். புதிய கணினி மேம்பாடுகள் அதற்கேற்ப மென்பொருள் அறிவையும் பெருக்க வேண்டும். தார்மீக மதிப்புகளை இளம் மனதில் ஆழப்பதிய செய்து நல்ல தலைமை மற்றும் தகவல் தொடர்பு முலம் நாட்டை மேம்படுத்த வேண்டும் |
| Membership in: | CSI, IEEE, IET |
| இளங்கலை படிப்புகள்: | B.E- CSE |
| முதுகலை படிப்புகள்: | M.E- CSE |
| கூட்டுப்பணிகள்: | MOU with IBM India Private Ltd,Convergy IT & Solutions,LinuXpert Systems |
- குறிக்கோள்
- நோக்கம்
- துறையின் கல்வி நோக்கங்கள்
- துறைசார் குறிக்கோள்கள்
- ஆசிரியர் விவரங்கள்
- ஆய்வக வசதிகள்
- தொழில்முறைப் பணியாளர்கள் படைப்புகள்
- MOU
- செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகள்
- மாணவர் சங்கங்கள்
- மாணவர்கள் மதித்துணை
- Industrial Visits
- Students Publications
- Class In-Charges
- முதன்மை மாணவர்கள்
- மாணவர்களின் பிறதுறைச் செயல்பாடுகள்
- Faculty Interactions
- மாதிரி வினாத்தாள்கள்


