கல்லூரி விடுதி

இவ்வளகாகத்தில் மாணவர்களுக்கும்,மாணவிகளுக்கும் தனித்தனியாக விடுதி அமைந்துள்ளது. ஒவ்வொரு அறையிலும் குளியலறை வசதியுடன் இரண்டு மாணவர்கள் தங்கி கொள்ளலாம். விடுதி அறைகள் நன்றாக பராமரித்து மாணவர்களுக்கு உயர்தர உணவுகள் வழங்கப்படுகிறது. இங்கு மாணவர்கள் ரேங்கிங்கில் இருந்து விடுபட்டு, வீட்டில் இருப்பது போன்றும் மூத்த  மாணவர்களுடன் சகோதரர்கள் போன்றும் பழகுகிறார்கள். வார்டனும், கல்லூரி நிர்வாகமும் மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள்.

                                              ஆண்கள் விடுதி        

                                    

             
                                பெண்கள்  விடுதி 

 

 

விடுதி விதிகள்

  • மாணவர்கள் விடுதி சேர்க்கை விண்ணப்பம் படிவத்தில் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் விடுதி சேர்க்கையில் விதிகளை ஒப்புக்கொண்டு எழுத்துப் பூர்வமாக எழுதி கொடுக்க வேண்டும். இதை பெற்றோர்கல் (அ) பாதுகாவலர் ஆமோதிக்க வேண்டும்.
  • மாணவர்கள் விடுதி சேர்க்கையில் கல்லூரி முதல்வர்(அ) தலைமை வார்டன் முடிவே இறுதியானது,
  • மாலை 6.00 to 08.00 மணி வரை மாணவர்கள் பயில வேண்டும். துணை வார்டன் வருகை பதிவை பதிவு செய்வார்.
  • கல்லூரி முதல்வர் (அ) வார்டனிடம் உரிய அனுமதி பெற்ற பின்பே விடுப்பு மற்றும் சேர்க்கை அனுமதிக்கப்படும்.
  • விடுதி மாணவர்கள் வெளியே செல்வதற்கு முதல்வர் (அ) வார்டனிடம் அனுமதி பெற வேண்டும்.
  • பெற்றோர்கள் அல்லது தெரிந்தவர்கள் மட்டுமே மாணவர்களை சந்திக்க அனுமதி உண்டு.

பார்வையாளர்கள் நேரம்:

4.00 P.M to 6.00 P.M -  வேலை நாட்கள்

9.00 P.M to 6.00 P.M - விடுமுறை நாட்கள்

  • விடுதி மாணவர்கள் முறையான அனுமதியின்றி பெற்றோர்களையோ அல்லது மற்றவர்களையோ தங்குவதற்கு அனுமதிக்க கூடாது.
  • வெளியிலிருந்து வரும் மாணவர்களுக்கு விடுதிக்குள் அனுமதி கிடையாது. மீறினால் விடுதி மாணவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.
  • விடுதி மாணவர்கள் தனது அறைக்குள் பணம் மற்றும் முக்கிய பொருட்களை வைத்திருக்கக் கூடாது. தவறியப் பொருட்களுக்கு கல்லூரி நிர்வாகம் பொறுப்பாகாது.
  • முறையான அனுமதியுடன் கணினி/மடிக்கணினியை எடுத்து செல்லலாம்.
  • உணவக நேரங்களை விடுதி மாணவர்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். மற்ற நேரங்களில் உணவுகள் வழங்கப்படாது.
  • விடுதி மாணவர்கள் வெளியில் செல்லும் பொழுது மின்னனு இயக்கிகளை அனைக்க வேண்டும்.
  • விடுமுறை நாட்களில் மாணவர்கள் கல்லூரி முதல்வர்/Director student Affairs யிடம் நுழைவுச் சீட்டில் அனுமதி பெற்று, அதை நுழைவு வாயிலில் செலுத்தி வெளியே செல்லலாம்.
  • புகைப்பிடித்தல்,சூதாடுதல் மற்றும் பிற கெட்ட பழக்க வழக்கங்களுக்கு முற்றிலும் விடுதிக்குள் அனுமதி கிடையாது.
  • மின்னியல் பொருள்கள் மற்றும் தளப்பாடங்களை விடுதி மாணவர்கள் உடைக்க கூடாது.
  • விடுதி வளகாகத்திற்குள் ஒழுங்கின்றி நடந்து கொண்டால் மிகக் கடுமையான தண்டனைகள் முறையே அபராதம், இடைநீக்கம், அல்லது விடுதியிலிருந்து நீக்கம்,அல்லது கல்லூரியிலிருந்தே நீக்கம் போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.
  • மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகள் இன்றி வேறேதேனும் நடந்தால், கல்லூரி முதல்வரின் முடிவே இறுதியானது.
  • Ragging/ பெண்களை கேலி செய்வது கல்லூரி விடுதிக்குள் தடைசெய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டால் தமிழக அரசின் ஆணைகளின் படி தண்டிக்கப்படுவார்கள்.
  • மாணவன்/மாணவி கள் விடுதி கட்டணங்கள் கட்டிய பிறகு திருப்பித் தர இயலாது.
  • உணவக வசதிகள் விடுதி மாணவர்களுக்கு உண்டு.
  • விடுதி மாணவர்கள் உணவகங்களை பயன்ப்படுத்தி கொள்ளலாம்.