மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை
எஸ் கே ஆர் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை 2001-2002ம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்டது. மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் சார் பொறியியல் பகுதியில் ஒவ்வொரு நொடியும் புதிய ஆராய்ச்சிகள் தொடங்கப்படுகிறது, புதியகண்டுபிடிப்புககள் நிகழ்ந்தவண்ணம் இருக்கிறது. இது வெகு விரைவாக முன்னேற்றம் அடையும் பொறியியல் பகுதி ஆகும். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் சார் பொறியியல் பகுதியில், கைபேசி தொடர்பியல், கண்ணாடி இழைகள் மற்றும் தொலை தூர செயல் அறியும் உணர்விகள் போன்ற மிகவும் ஆச்சரியப்படத்தக்க பொறியியல் பகுதிகள் இருக்கின்றன. இந்த பொறியியல் பகுதி, விரைவாக புதிய விஷயங்களை அறியும் வண்ணமும், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும், அதனால்புதியன உருவாக்க கூடியதாகவும் இருக்கின்றது.
மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை, மாணவர்களை, தங்கள் தொழில்வாழ்க்கைக்கு தயார்படுத்தும் பணியில் சிறப்பாக செயல்படுகிறது. இந்த துறைக்கான பாடதிட்டம் மாணவர்களுக்கு ஏற்றவண்ணம் நல்ல முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பலதரப்பட்ட பொறியியல் பகுதிகள் இந்த துறையின்கீழ் ஒன்றிணைக்கப்பட்டு, மாணவர்களின் அறிவியல்சார் விருப்பம், அவர்களின் திறமைகள், வாழ்க்கைத்தொழில்,மற்றும் அவர்களின் வாழ்வின் நோக்கம் ஆகியவற்றை அடையும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த துறை மாணவர்கள் தாங்கள் தொழிற்சாலைககளில் சிறப்பாக பணியாற்றும் விதத்திலும், உயர் கல்வி கூடங்களில் நன்கு பணிபுரியும் வண்ணமும், நிர்வாகத்திறனில் சிறப்பானவர்களாக திகழும் விதத்திலும், தங்களை நன்கு தயார்படுத்தி வருகிறார்கள். எஸ் கே ஆர் பொறியியல் கல்லூரி, தங்கள் மாணவர்கள் ஆராய்ச்சி பணிகளில், வடிவமைப்பு மற்றும் உருவாக்குதல் பணிப்பொறுப்புகளில் தலைமை ஏற்று செயல்படும் வண்ணம், மாணவர்களை தயார்படுத்துகிறது. மேலும் இப்படிப்பட்ட பொறுப்புகளுக்கு யோசனை சார்ந்த உழைப்பும்,திறமைகளும் தேவைப்படுவதால்,மாணவர்களுக்கு சிறப்பு பயிற்ச்சிகள் அளிக்கப்பட்டு,தயார்படுத்தப்படுகிறார்கள்.
மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையின் அனைத்து செயல்முறை ஆய்வகங்களும், முழுமையான சாதனங்களையும், கருவிகளையும் உள்ளடக்கிய சோதனைக்கூடங்களாக செயல்படுகின்றன. இந்த துறையில் தொடர்பியல் ஆய்வகம், நுண்செயலி ஆய்வகம், மின்னணுவியல் மற்றும் மின்னிணைப்புகள் ஆய்வகம், நுண்அலை ஆய்வகம், எண்ணியல் மற்றும் தொடரிசை ஆய்வகம், ஒளியிழை தொடர்பியல் ஆய்வகம் மற்றும் அதிமின்னிணைப்பு சில்லுகள் ஆய்வகமும் சிறந்த முறையில் உபயோகப்படுத்தப்படுகின்றன.
மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் உயர்கல்வி பட்டம் பெற்ற, அதிக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இந்த துறை, தொழிற்கூடங்களில் முன் அனுபவம் பெற்றவர்களாகவும், ஆசிரிய பணியில் சிறப்பான முன்அனுபவம் பெற்றவர்களுமான ஆசிரியர்களை, நல்ல விகிதத்தில் பெற்றிருப்பதால் சிறப்பாக செயல்படுகிறது. மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை ஆசிரியர்கள், உயிர்களின் மருத்துவ ஆய்வுடைய குறிகையை செயலிக்கு உட்படுத்துதல், தொடர்பியல் சாதனங்கள் மற்றும் முறைகள், கணினியின் நோக்குதல், கருவிமயமாக்குமியல், பன்னூடகப் பாதுகாப்பு, உயர் அதிர்வெண் கதிர் மற்றும் நுண்அலைகள் மற்றும் அதிமின்னிணைப்பு சில்லுகள் போன்ற பொறியியல் சிறப்பு பிரிவுகளில் மிகுந்த புலமையும் அனுபவமும் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
மாணவர்கள் சிறப்பான கல்வி பெறுவதுடன், பெருமைமிக்க தொழிற்கூடங்களில் பணியமர்த்தலுக்கான சிறப்பு பயற்ச்சிகளும் பெறுகிறார்கள். ஆதலால் மாணவர்கள் பெரிய தொழிற்கூடங்களில் பணியமர்த்தலுக்கான நல்ல சூழல் இருக்கிறது.
துவக்கம்: |
2001 |
டீன் ர & டி: |
முனைவர் T. கல்பலதா ரெட்டி |
துறைத் தலைவர்: |
திருமதி.T.முத்துக்குமாரி M E (PHD) |
துறை நோக்கல்: |
உலக தரத்தில், போட்டியில் பங்கேற்பதற்கு ஏற்ப, தொழில் நுட்ப உயர்அறிவுடன், புதியன உருவாக்கும் தகுதிபெற்ற, சமுதாய பொறுப்புணர்வுடைய பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கி, நாட்டின் பொருதாரத்தையும், தொழில் வளர்ச்சியையும் முன்னேற்றமடைய செய்வதே ஆகும். |
துறை குறிக்கோள்: |
1. மாணவர்களுக்கு தரம்வாய்ந்த தற்காலத்தைய கல்வியை மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில், முறையாக புதுப்பிக்கப்பட்ட பாடத்தட்டத்தின் மூலம் கொடுப்பது.
2. சிறந்த தரம்வாய்ந்த ஆய்வக வசதிகளை முறையாக புதுப்பிக்கப்பட்ட பாடத்தட்டத்தின் மூலம் வழங்குவது.
3. ஏற்றமிகு கல்வி கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளை கடைப்பிடிப்பது. |
உறுப்பினர்: |
பொறியாளர்கள் நிலையம்( இந்தியா), மின்னணுவியல் மற்றும் தொலைதூர தொடர்பியல் பொறியாளர்கள் நிலையம்,பொறியியல் மற்றும் தொழில் நுட்ப பொறியாளர்கள் நிலையம். |
இளங்கலை பட்ட பிரிவுகள்: |
மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியலில் இளங்கலை பொறியியல் |
முதுகலை பட்ட பிரிவுகள்: |
அதிமின்னிணைப்பு சில்லுகள் வடிவமைப்பு பிரிவில் முதுகலை பொறியியல் |
இணைவாக்கம்: |
தேசிய கருவிகள் இந்தியா,தனியார் நிறுவனத்துடன் ஒத்துழைப்பு உடன்படிக்கை, இடையூறற்ற வெளி தன்னியக்கம்,தனியார் நிறுவனத்துடன் ஒத்துழைப்பு உடன்படிக்கை. |
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை NBA-AICTE 3 ஆண்டுகள் அங்கீகாரம் பெற்றுள்ளது.