இயந்திரவியல் பொறியியல் துறை

இயந்திரவியல் பொறியியல் துறை, இக்கல்லூரியில் கல்வி ஆண்டு 2005ல் நிறுவப்பட்ட்து. இத்துறையின் மூலம் ஓவ்வொரு ஆண்டும் 60 மாணவர்களுக்கு, நான்கு ஆண்டு இளநிலை பட்ட படிப்பு பயிற்றுவிக்கபடுகிறது.

 

இயந்திரவியல் துறை பல்வேறு உள்கட்டமைப்புகளுக்கும் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்த துறைகளுக்கும் அடிப்படையாக அமைகிறது. பொறியியல் துறைகளில் இயந்திரவியல் துறையின் மூலம் பல்வேறு வேலைவாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இத்துறையில் தனிப்பட்ட நபரின் ஆளுமை மற்றும் படைப்பு திறமைகளுக்கு ஏற்றாற் போல் தொழில் துறையில் உயர்வு கிடைக்கிறது.

 

இந்த்துறை அர்ப்பணிப்பு உணர்வுடன், திறம்பட உழைக்க்கூடிய, ஆழ்ந்த துறை சார்ந்த கல்வியறிவு பெற்றுள்ள பேராசிரியர்களை கொண்டிருக்கிறது. இந்த துறையில் நிகழ்கால தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை வளர்ச்சிகளுக்கு ஈடுசெய்யும் வகையில், உலகதரத்துடன் கூடிய, கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த்துறை அறிவிலும், பண்பிலும் சிறந்து விளங்கக்கூடிய மாணவர்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறது. இயந்திரவியல் துறை அறிவுசார் கலந்துரையாடல்களும், பேராசிரியர் திறனூக்கும் பயிற்சிகளும், பொறியியல் துறை சார்ந்த குழுமங்களுடன் இணைந்து நட்த்துகிறது.( எ. ஐ. சி. டி. இ, எஸ். எ. இ, ஐ. எஸ். டி. இ, எ. யு, டி. இ. டி. எ). இயந்திரவியல் துறை உலகதரத்தை எட்டவும், அதை தொட்ர்ந்து நிலைநிறுத்தவும் தன்னுடைய கடின உழைப்பை தொடர்ந்து வழங்கிவருகிறது.

 

துவக்கம்: 2001
துறைத் தலைவர்: திரு. டி. செந்தில்குமார். M.E., (Ph.D)

 

துறையின் நோக்கம்:

மாணவர்களை உலகத்தரம்வாய்ந்த, தற்கால அறிவியல் ஆராயிற்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தேவைகளுக்கேற்ப, சமூக நெறிமுறைகளுக்குட்பட்டு, நாட்டின் மேம்பட்ட வளர்ச்சிக்காக நன்முறையில் திறமைகளை நிர்வகித்து, சிறப்பாக செயல்படகூடிய, சீர்மிகுந்த பொறியாளர்களாக வடிவமைப்பதற்கு, இயந்திரவியல் துறை முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் முயற்சிக்கும்.

 

 

துறையின் குறிக்கோள்:

1. இயந்திரவியல் துறை சார்ந்த, தரம் வாய்ந்த தொழில்நுட்ப கல்வியை பயிற்றுவிப்பது.

2. புதிய எண்ணங்களையும், கருத்துருவாக்கங்களையும் பகிர்ந்து கொள்வதன் மூலமாக துறை சார்ந்த அறிவை வளர்ப்பது.

3. மாணவர்களிடம் பாடதிட்டங்களுடன் கூடிய, உற்பத்தி சார்ந்த நிர்வாக திறமைகளை வளர்ப்பது.

4. மாணவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு பெற்றிடவும் வாழ்க்கை முழுவதும் கற்கும் ஆர்வத்தை தூண்டுவது.

உறுப்பினர்: எஸ். எ. இ இந்தியா மற்றும் ஐ. எஸ். டி. இ
பட்ட பிரிவு: இயந்திரவியல் துறை - 60 மாணவர்கள்
இணைவாக்கம்: NI India PVT, IBM, and Solid Works ஆகிய நிறுவன்ங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.